தமிழக செய்திகள்

இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைப்பெற்ற கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்- மாணிக்கம் தாகூர்

இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற வந்துள்ள தமிழக வெற்றி கழகத்தை இண்டிய கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.

இண்டியா கூட்டணி கட்சிகளின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டமானது இன்று சத்திய மூர்த்தி பவனில் நடைப்பெற்றது. அதில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள்

முதலாவது திர்மானம், இண்டியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற வந்துள்ள தமிழக வெற்றி கழகத்தை இண்டியா கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த நல்ல அரசியல் முடிவை எடுத்த தமிழக வெற்றிகழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய் அவர்களை இக்கூட்டம் மனமார பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.

இரண்டாவது தீர்மானம்

சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கின்ற வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குகளைபறிக்கின்ற வகையில் செயல்படுகின்ற தேர்தல் ஆணையத்தையும் அதன் தலைவரான ஞானேஷ் குமார் பதவியை ஒரு கருவியாக பயனப்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை அரங்கேற்றி வரும் மோடி அமித்ஷா கூட்டணியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்பதை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஜனநாயகம் காப்போம் ஆர்ப்பாட்டம்

இந்த ஜனநாயக படுகொலையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 13, 14 தேதிகளில் இண்டியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஜனநாயகம் காப்போம் (Save Democracy) என்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.என்று தெரிவித்தார்.

15-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், நான்காவது தீர்மானமாக சென்னையில் அக்டோபர்15 தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இண்டியா கூட்டணியின் தமிழ்நாட்டின் கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்

ஐந்தாவது தீர்மானம்

இந்திய ஜனநாயக்தை பேரழிவில் இருந்து காக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், ஒத்த கருத்துடைய அரசியல் தலைவர்களும், தன்னார்வல தொண்டு நிறுவனஙக்ளும் இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன், திருமாவளவன், பெ.சண்முகம், வைகோ, உட்பட எட்டு கட்சிகளுடன் இந்த கூட்டம் நடைப்பெற்றதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT