தமிழக செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது - இந்திய வானிலை ஆய்வு மையம்

வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' என பெயரிடப்படும்.

இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வரும் 15 முதல் 17-ந்தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று காற்று வீசும். தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்வான் புயல்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' என பெயரிடப்படும்.

அக்வான் என்பது பாரசீக மொழியில் இருந்து வந்த ஒரு புராண பெயராகும். ஈரானிய இதிகாசமான ஷாநாமாவில் இடம்பெறும் ஒரு மாயாஜால அரக்கனின் பெயர் அக்வான் திவ் ஆகும். பழைய பாரசீக மொழியில், அக்வான் என்பதற்கு "தீய எண்ணம்" என்று பொருள். இந்த அரக்கன் புயலாகவோ அல்லது காற்றாகவோ உருமாறும் சக்தி கொண்டவனாக கதைகளில் சித்தரிக்கப்படுகிறான்.

SCROLL FOR NEXT