தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ந்தேதி பதவியேற்றார்.

முக்கிய கோப்புகள்

முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பு, மகளிர் பாதுகாப்புக்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான சிறப்புப் பிரிவு ஆகிய மூன்று முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அன்று முதல் முதலமைச்சர் விஜய் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகம் வருகை தந்து, பணிகளை கவனித்து வருகிறார்.

முதல் பட்ஜெட்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றது முதல் அவரை சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தினத்தந்தி குழுமத்தின் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்தித்து பேசினார். அப்போது, அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தினத்தந்தி குழும இயக்குநர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோரும் உடன் இருந்தனர்.