தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்துங்க.. தலைமை செயலாளர் உத்தரவு

தலைமை செயலாளர் முருகாணந்தம் ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.

வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பருவமழை தொடங்குவதை ஒட்டி, பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்துகிறார். 

SCROLL FOR NEXT