தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் த.வெ.க. ஆட்சியைப் பிடித்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் த.வெ.க. ஆட்சியைப் பிடித்தது. விஜய் முதல்வராக பதவியேற்றார்.

ஆட்சியமைத்த பின் அமைச்சரவை அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கி ஆட்சியில் பங்களிப்பு வழங்கினார் முதல்வர் விஜய். இதன் மூலம் தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும் என செய்தி வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. த.வெ.க. ஆட்சியமைத்த பின் முதல் முறையாக நடக்கும் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.