பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 73. பாக்யராஜ் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பார்த்திபன், கவுண்டமணி மற்றும் நடிகைகள், இயக்குநர்கள் என திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, பாக்யராஜ் நேற்று கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பாக்யராஜ் உயிரிழப்புக்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
* நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு பாக்யராஜ் சென்னை திரும்பியுள்ளார்.
* பாக்யராஜ் எழுத்தாளர்கள் சங்க தேர்தல் தொடர்பாக இரவு முழுவதும் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
* இரவெல்லாம் தூங்காமல் இருந்த நிலையில், இன்று காலை பாக்யராஜ் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
* பாக்யராஜ் வீடு திரும்பியதும் வந்த செல்போன் அழைப்பை ஏற்று சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
* பாக்யராஜ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென சோஃபாவில் அமர்ந்து மயங்கியதாகவும், இதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பாக்யராஜ் உயிர் பிரிந்தது என்றும் கூறப்படுகிறது.