தமிழக செய்திகள்

டெல்லி போராட்டத்தில் சண்முகம்!

போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்.

நான் இப்போது புதுதில்லியில் இருக்கிறேன். டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது நாளை களத்தில் சந்திக்க இருக்கிறோம் என்று சிபிஎம் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

போராட்டம் அறிவிப்பு

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்களை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தை சிஜேபி,அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளன.போராட்ட அறிவிப்பை எதிரொலியை அடுத்து டெல்லியில் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுவது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி போலீசார் கேட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் டெல்லியில் திட்டமிடப்பட்டிருந்த சிஜேபி மற்றும் AISF மாணவர் அமைப்புகளின் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக கோவா எக்ஸ்பிரஸ் ரயிலில் புனேவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த மாணவர்கள் மத்தியப் பிரதேசத்தின் இதார்சி ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நான் இப்போது புதுதில்லியில் இருக்கிறேன். டெல்லியில் போர் பதற்றச் சூழல் நிலவுகிறது என்று சிபிஎம் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

போராடுவது அடிப்படை உரிமை

நம்நாட்டு மாணவர்கள் - இளைஞர்கள் மீது யுத்தத்தை தொடுக்க பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

வாக்குத் திருடன் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க அவரால் பயனடைந்த மோடி அமித்ஷா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

நாளை களத்தில் சந்திக்க இருக்கிறோம்.போராடுவது அடிப்படை உரிமை என்று உரக்கச் சொல்வோம்

என்று குறிப்பிட்டுள்ளார்

SCROLL FOR NEXT