மம்தா  
இந்தியா

துரோகிகள்.. தையிரம் இருந்தால் பாஜகவில் சேர்ந்து நேரடியாக என்னுடன் மோதுங்கள் - மம்தா ஆவேசம்

மம்தா என் மீது சுமத்திய பழி என்னை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சந்திரா முகர்ஜி நேற்று திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதிருப்தி குழு

ஏற்கனவே ரிதர்பா தலைமையிலான நிறுத்தி குழு எதிர்க்கட்சி அந்தஸ்தை கைப்பற்றியதும், கட்சி அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும், கணிசமான எம்பிகள் கட்சி தாவியதும் அக்கட்சியின் நிறுவனர் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் மாநில தலைவர் ராஜினாமா பேரிடியாக அமைந்துள்ளது.

சந்திரா முகர்ஜி வேதனை

இந்நிலையில் கடந்த ஜூன் 3ஆம் தேதி காளிகாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவராக நியமிக்கட்ட சந்திரா முகர்ஜி ஒரே மாதத்தில் அந்த பதவியை துறந்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட சந்திரா முகர்ஜி, ராஜினாமாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சி அலுவலகத்தில் வைத்து மம்தா பானர்ஜி என்னிடம் நடந்துகொண்ட விதம் எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

நான் கட்சி அலுவலகத்தை அதிருப்தியாளர்களிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக மம்தா என் மீது சுமத்திய பழி என்னை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது" என்றார்.

மம்தா சாடல்

இதனிடையே சமூக வலைதள லைவில் பேசிய மம்தா பானர்ஜி,

"கட்சியை விட்டு வெளியேறியுள்ள அதிருப்தி தலைவர்கள், பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு திரிணாமுல் காங்கிரஸை உடைக்கச் சதி செய்கிறார்கள்.

கட்சியை விட்டுப் போயிருப்பவர்கள் அனைவரும் துரோகிகள்; நன்றிகெட்டவர்கள்.

தைரியமிருந்தால் அவர்கள் நேரடியாகப் பாஜகவில் இணைந்து என்னை எதிர்கொள்ளட்டும்.

சில தனிநபர்கள் கட்சியை விட்டுப் போவதால் திரிணாமுல் காங்கிரஸ் என்ற பேரியக்கம் அழிந்துவிடாது.

இந்த இக்கட்டான சூழலிலும் என்னுடன் உறுதியாக நிற்கும் அடிமட்டத் தொண்டர்கள் தான் கட்சியின் உண்மையான தங்கச் சுரங்கம்" என்று சவால் விடுத்தார்.

பொறுப்பு

கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா பக்ஷி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்காலிகமாகப் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பை தானே நேரடியாகக் கவனிப்பதாக மம்தா அறிவித்தார்.

மேலும், குணால் கோஷ் மற்றும் மதன் மித்ரா ஆகியோரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக உடனடியாக நியமித்து உத்தரவிட்டார்.

உரிமை

தற்போது திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்கள் பிரிவில் உள்ளனர்.

ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான இந்த அதிருப்தி குழுவினரை சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியாக சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரித்துள்ளார்.

இந்த அதிருப்தியாளர்கள் குழு தற்போது திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ சின்னத்தைப் பெற உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.