மம்தாவுக்கு பின்னடைவு: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரிமா

மேற்கு வங்க முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
mamata banerjee
Published on

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான சந்திரிமா பட்டாச்சார்யா மாநில தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மம்தா பானர்ஜி கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக சுப்ரதா பக்‌ஷியை நியமனம் செய்தார். மாநில தலைவராக பதவியேற்ற ஒரே மாதத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ராஜினாமா மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது. சுவேந்து அதிகாரி முதல் மந்திரியாக பதவியேற்றார்.

மம்தா பானர்ஜியின்மீது அதிருப்தி ஏற்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்.எல்.ஏ.க்களில் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிருப்தி எம்.எம்.ஏ.க்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கைவிட அதிகம் என்பதால் மம்தா பானர்ஜியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை அதிருப்தி குழு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com