இந்தியா

இந்தியாவே உச்ச நீதிமன்றத்தை நோக்கி படையெடுக்கும் - ராகுல் காந்தி

இந்தியர்களாக ஒன்றிணைந்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்வோம்.

தேர்தல் முறைக்கேடு, வாக்குதிருட்டு, டெல்லியில் போராடியவர்கள் கைதுஆகியவற்றை கண்டித்தும், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தியர்களாக ஒன்றிணைந்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் நாளை பேரணி செல்ல இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காணொளி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

கோழைகளால் எங்களை அச்சுறுத்த முடியாது

இளைஞர்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தின் மீதும் இந்திய அரசியலமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இணைந்து வருவார்கள்.

வாக்குத் திருட்டை (vote chori) முடிவுக்குக் கொண்டுவருதல், SIR-ஐ நிறுத்துதல் மற்றும் ஞானேஷ் குமார் பதவி விலகுதல் ஆகியவற்றை வலியுறுத்தி, நாட்டின் சார்பாகத் தலைமை நீதிபதியிடம் நாங்கள் ஒரு மனுவைச் சமர்ப்பிப்போம்.

உச்சநீதிமன்றம் நோக்கி படையெடுக்கும்

நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் மற்றும் மோகன் பகவத் ஆகியோரால் இந்தியாவின் குரலை ஒடுக்க முடியாது. இந்த கோழைகளால் எங்களை அச்சுறுத்த முடியாது. அவர்கள் விலகிச் செல்ல வேண்டியிருக்கும்.

அன்பு, சகோதரத்துவம் மற்றும் தேசபக்தியுடன் நாங்கள் ஒன்றிணைந்து பேரணி செல்வோம்.அஞ்சாதீர்கள் நாளை, இந்தியா முழுவதுமே உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்லும்.

SCROLL FOR NEXT