டெல்லியில் போராட்டம் நாளையும் தொடரும் - சிஜேபி அறிவிப்பு

அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என தீப்கே தெரிவித்தார்.
சிஜேபி போராட்டம்
Published on: 
Summary

ஞாயிறன்று போராட்டம் தொடரும் என சிஜேபி பொறுப்பு தலைவர் அஜிங்க்யா ஷிண்டே அறிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும் என்று சிஜேபி தெரிவித்துள்ளது.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் பல நிர்வாகிகள் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர். அஜிங்க்யா ஷிண்டே போராட்டத்தை முன்னெடுத்து செல்வார் என தீப்கே வீடியோ மூலம் தெரிவித்தார்.

போராட்டம் தொடரும்

இந்நிலையில் டெல்லியில் சிஜேபி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அஜிங்க்யா ஷிண்டே, ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது. நாளை (ஞாயிற்றுக்கிழமையன்று) காலை 10 மணிக்கு சி.ஜே.பி மீண்டும் ஜந்தர் மந்தருக்குப் பேரணி செல்லும் என்று அறிவித்தார்.

நாளை சி.ஜே.பி., ஏ.ஐ.ஒய்.எஃப்., ஏ.ஐ.எஸ்.எஃப். மற்றும் எஸ்.எஃப்.ஐ. ஆகிய அமைப்புகளின் போராட்ட அழைப்பிற்கு இணங்க, அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தடுப்புக்காவல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டக்காரர்களும் விடுவிக்கப்பட்டனர்.

இன்றைய போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்.ஐ.ஆர் செயல்முறையை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று டெல்லியில் சி.ஜே.பி. மற்றும் பிற அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 48 மணி நேரத்தில் டெல்லியின் எல்லைகளில் வாகனச் சோதனைகள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com