புனேயின் மிக முக்கியமான ஐடி மையமான ஹின்ஜவடியையும் (Hinjewadi), சிவாஜிநகரையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புனே மெட்ரோவின் புதிய பிங்க் லைன் (Line 3) பல வரலாற்றுச் சிறப்புமிக்க சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.2026 நவம்பர் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டு, நவம்பர் 4 முதல் இது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா அஜித் பவார் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா அஜித் பவார் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ₹8,300 கோடி செலவில், 23 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ பாதை பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது
இந்த பிங்க் லைன் மெட்ரோவின் மிக முக்கியமான சிறப்பம்சமே, இதன் அனைத்து ரயில்களும் பெண் ரயில் ஓட்டுநர்களால் மட்டுமே இயக்கப்படவுள்ளன. மேலும், இந்த வழித்தடத்தின் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சுமார் 50% பேர் பெண்களாக இருப்பார்கள். இந்தியாவில் பாலின சமத்துவத்திற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த பிங்க் லைன் மெட்ரோவின் மொத்த மின்சாரத் தேவையில் கிட்டத்தட்ட 30% மூன்றில் ஒரு பங்கு சூரிய ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது
ஹின்ஜவடி ஐடி பூங்காவிற்கு தினசரி பயணிக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஐடி ஊழியர்களுக்கு இதுவொரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பீக் ஹவர்ஸில் (Peak Hours) சாலை வழியாகச் செல்ல 90 நிமிடங்களுக்கும் மேலாகும் பயண நேரம், இனி இந்த மெட்ரோ மூலம் வெறும் 45 நிமிடங்களாகக் குறையும்.
பயணிகளை மெட்ரோவைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும், சாலை நெரிசலைக் குறைக்கவும், புனே மாநகராட்சி (பிஎம்சி) தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களுக்கு அருகில் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்கியுள்ளது. பாலேவாடியில் உள்ள அமர் டெக் பார்க் பகுதியில், பிஎம்ஆர்-11 நிலையத்திற்கு அருகில் சுமார் 30,000 சதுர அடி பரப்பளவில் ஒரு வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச போக்குவரத்து நேரங்களில் ஆறு நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 12 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் புனே மெட்ரோவின் புதிய பிங்க் லைனை மிகவும் சிறப்பானதாக ஆக்குவது எது? என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஹிஞ்சேவாடியின் தகவல் தொழில்நுட்ப மையத்தை சிவாஜிநகருடன் இணைக்கும் 23 கி.மீ.பெண்களால் இயக்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட மின்சாரத் தேவைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சூரிய ஆற்றலில் இருந்து பெறப்படுகிறது.நாளை, ரூ. 8,300 கோடி மதிப்பிலான இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் திறந்து வைக்கப்படும் .புனேவின் 'வாழ்க்கை எளிமைக்கு' ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கம்
என்று தெரிவித்துள்ளார்.