புனே ஆராய்ச்சி நிறுவன நூலகத்தில் இருந்து நீக்கப்பட்ட உமர் காலித்தின் புத்தகம்

ஹோ பழங்குடி மக்கள், ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சி மற்றும் பழங்குடி-அரசு அதிகார உறவுகள் குறித்து இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றை இது நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது
Umar Khalid’s book
Published on: 

புனே நகரில் உள்ள மத்திய அரசின் தன்னாட்சி கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து சமூக ஆர்வலர் உமர் காலித் எழுதிய வரலாற்று ஆய்வுப் புத்தகமானது அகற்றப்பட்டுள்ளது.

புனே நகரில் உள்ள மத்திய அரசின் தன்னாட்சி கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து சமூக ஆர்வலர் உமர் காலித் எழுதிய வரலாற்று ஆய்வுப் புத்தகமானது அகற்றப்பட்டுள்ளது.

Fractured Communities: Adivasi Histories and the Politics of Power (பிளவுபட்ட சமூகங்கள்: ஆதிவாசி வரலாறுகளும் அதிகாரத்தின் அரசியலும்) என்ற தலைப்பில் அப்புத்தக்கமானது எழுதப்பட்டது.

மேலும் இந்த புத்தகமானது உமர் காலித் ஜவர்ஹால் நேரு பல்கலைகழகத்தில் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆயவை அடிப்படையாக எழுதப்பட்டது.

தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தின் சிங்பூம் பகுதியில் வாழும் ஹோ பழங்குடி மக்கள், ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சி மற்றும் பழங்குடி-அரசு அதிகார உறவுகள் குறித்து இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றை இது நூல் விரிவாக ஆராய்ந்துள்ளது

நூலகத்திலிருந்து நீக்கப்பட்ட புத்தகம்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இயங்கும் ஒரு கணக்கு, மத்திய அரசின் அறிவியல் நிறுவனத்தில் பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரின் புத்தகம் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆட்சேபனை தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சமூக ஊடகப் புகாரைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் குழு தலைவர் மற்றும் இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். தேவையற்ற தவறான புரிதல்களையும் அமைதியின்மையையும் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே" இப்புத்தகம் நூலக அலமாரிகளிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாக IISER புனே நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது

மேலும், இப்புத்தகத்தைப் பரிந்துரைத்து நூலகத்தில் சேர்க்கக் காரணமானவர்கள் மீது துறைரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

இப்புத்தகம் வெறும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறு குறித்த ஒரு கல்விசார் ஆய்வு நூல் மட்டுமே. சமூக ஊடகங்களின் அழுத்தத்திற்குப் பயந்து ஒரு நூலகத்தில் இருந்து புத்தகத்தை நீக்குவது கருத்துச் சுதந்திரத்திற்கும் கல்விச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜே.என்.யு (JNU) முன்னாள் மாணவரான உமர் காலித், கடந்த 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடந்த கலவரங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2020 செப்டம்பர் முதல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் டெல்லி திகார் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

X