இந்தியா

லக்னோ சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநர் (சிறைத்துறை டிஜி) மற்றும் லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நவம்பரில் லக்னோ சிறைகளில் ஏழு நாட்களுக்குள் இரண்டு கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

உத்தரப் பிரதேச லக்னோவில் உள்ள இரண்டு வெவ்வேறு சிறைகளில் ஏழு நாட்களுக்கு இரண்டு கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து (suo motu) வழக்குப்பதிவு செய்து, மாநில சிறைத்துறை இயக்குநர் மற்றும் லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

லக்னோவில் உள்ள வெவ்வேறு சிறைகளில் ஏழு நாட்களுக்குள் இரண்டு கைதிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது, காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் சாத்தியமான மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நவம்பர் 26 அன்று வெளியான ஊடக அறிக்கை ஒன்றின் அடிப்படையில், இச்சம்பவங்கள் குறித்த விரிவான அறிக்கைகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரி, உத்தரப் பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநருக்கும், லக்னோ மாவட்ட ஆட்சியருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

செய்திகளில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது மனித உரிமைகளை மீறும் தீவிரமான விவகாரம் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச சிறைத்துறை தலைமை இயக்குநர் (சிறைத்துறை டிஜி) மற்றும் லக்னோ மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மரணங்கள் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கோரியுள்ளது.

இந்த இரண்டுன் சம்பவங்களையும் ஆய்வுக்கு உட்பட்டுத்தியிருப்பது காவலில் உள்ள அறிக்கைகள். மரணங்களுக்கான சூழ்நிலைகள் ஆகியவற்றை வெளிகொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT