இந்தியா

குஜராத்தில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய வெளிநாட்டினர் புல்டோசரில் மீட்பு - வீடியோ

குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாதோராவில் கனமழையில் சிக்கி 6 வெளிநாட்டினர் தவித்து வருவதாக மீட்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெள்ளம் நிறைந்த சாலையில் வெளிநாட்டினர் 6 பேரையும் புல்டோசரில் அழைத்து சென்று மீட்புப்படையினர் மீட்டனர்.

வெளிநாட்டினர் புல்டோசரில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

குஜராத் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT