சினிமா செய்திகள்

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக ஷாருக் கான் இருக்கிறார். முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

மாலை மலர்

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என்று அறியப்படும் பிரபல நடிகர் ஷாருக் கான். திரைத்துறை மட்டுமின்றி பல்துறை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள ஷாருக் கான், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார்.

இந்த நிலையில், நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை துவங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பந்த்ரா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நடிகர் சல்மான் கானுக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.