சினிமா செய்திகள்

அனிருத் திருமண வரவேற்பில் ஸ்டாலின், எடப்பாடி - ரஜினி சந்திப்பு: வைரலாக புகைப்படம்!

முதலமைச்சரான பிறகு ரஜினியும் - விஜய்யும் முதல்முறையாக அனிருத் திருமண வரவேற்பு விழாவில் சந்தித்தனர்.

இசையமைப்பாளர் அனிருத்-காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய்

இதில் முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும, நடிகருமான கமல்ஹாசன் உள்பட ஏராளமான திரைபிரபலங்களும் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர்.

ரஜினி-விஜய் சந்திப்பு

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விஜய் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர்.

முதலமைச்சர் ஆன பிறகு விஜய்யும், ரஜினியும் இதுவரை சந்திக்காமலேயே இருந்து வந்தனர். இந்த நிலையில் அனிருத்-காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவரும் நேற்று சந்தித்து கை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

ஸ்டாலின், எடப்பாடி - ரஜினி சந்திப்பு

முதலமைச்சர் விஜய்யும், ரஜினியும் சந்தித்துக் கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள், அவரது திரைப்பட பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டு ரீல்ஸ்களாக உருவாக்கி பரப்பி வருகிறார்கள்.

மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஏ.ஐ.வீடியோ

இதற்கிடையே முதல்-அமைச்சர் விஜய்யும், ரஜினி காந்த்தும் சந்தித்து கொண்ட வீடியோக்களை ஏ.ஐ. வீடியோக்களாக மாற்றியும் பலர் வெளியிட்டு உள்ளனர்.

அதில் விஜய்-ரஜினி இருவரும் கட்டிப்பிடிப்பது போன்று உருவாக்கப்பட்ட ஏ.ஐ.வீடியோவை அதிக அளவில் பலரும் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு உள்ளனர்.

SCROLL FOR NEXT