என் மலர்
ஆன்மிகம்
- சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன்,
- பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்.
ஆண்குழந்தைகளுக்கான பெயர்கள்:
சக்திபாலன், சரவணன், சுப்ரமண்யன், குருபரன், கார்த்திகேயன், சுவாமிநாதன், தண்டபாணி, குகஅமுதன், பாலசுப்ரமணியம், நிமலன், உதயகுமாரன், பரமகுரு, உமைபாலன், தமிழ்ச்செல்வன், சுதாகரன், சற்குணசீலன், சந்திரமுகன், அமரேசன், மயூரவாஹனன், செந்தில்குமார், தணிகைவேலன், குகானந்தன், பழனிநாதன், தேவசேனாபதி, தீஷிதன் சிவகுமார், ரத்னதீபன், லோகநாதன், தீனரீசன், சண்முகலிங்கம், குமரகுரு, முத்துக்குமரன், அழகப்பன், தமிழ்வேல், மருதமலை, சுசிகரன், குமரன், தயாகரன், ஞானவேல், சிவகார்த்திக், குஞ்சரிமணாளன், முருகவேல், குணாதரன், அமுதன், செங்கதிர்ச்செல்வன், பவன்கந்தன், திருமுகம், கதிர்காமன், வெற்றிவேல், ஸ்கந்தகுரு. பாலமுருகன், மனோதீதன், சிஷிவாகனன், இந்திரமுருகன். செவ்வேல், மயில்வீரா, குருநாதன், பழனிச்சாமி, திருச்செந்தில், சங்கர்குமார், சூரவேல் குருமூர்த்தி, சுகிர்தன்பவன், கந்தசாமி, ஆறுமுகவேலன், வைரவேல், அன்பழகன், முத்தப்பன், சரவணபவன், செல்வவேல், கிரிசலன், குலிசாயுதன், அழகன், தண்ணீர்மலயன்.
பெண்குழந்தைகளுக்கான பெயர்கள்:
கார்த்திகா, கார்த்திகாயினி, கிருத்திகா, பழனியம்மாள், விசாகா, சண்முகப்பிரியா, சண்முகி, சரவணப் பிரியா, தமிழ்ச்செல்வி, வெற்றிச்செல்வி, முருகம்மாள், வேலம்மாள், வேலாயி, ஜெயந்தி, செண்பகம், செண்பகப் பிரியா, மருதம்மாள், மருதாயி, வள்ளி, தெய்வானை.சக்திதாரா, எழில் வெண்பா, மயிலினி, விசாலினி, நித்ரா, மகிழ்வதனா, எழில் நேத்ரா, சென்னியம்மாள், அமராவதி, கந்தம்மாள், இனியா, கந்தாயி, சோலையம்மாள், தங்கமயில், சண்முகலட்சுமி, வெண்பா, செந்தூரதேவி, இளமயிலி, கந்தவி, தணிகைவேதா.
- புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
- மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.
தமிழ் மாதந்தோறும் 2 சிவராத்திரிகள் வருகின்றன. அதற்கான சிறப்புகள் வருமாறு:-
சித்திரை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும். உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.
வைகாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும். சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;
ஆனி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்.
ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜை செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;
ஆவணி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால் பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும். மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்.
புரட்டாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,செல்வம் பெருகும்.
ஐப்பசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜை செய்தால், நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலையமாட்டோம். வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம். அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;
கார்த்திகை மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளிலும் விரதம் இருந்துவழிபட்டால் குறைவற்ற செல்வ வளம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;
தை மாதத்தில் வரும் 2 சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நெல் முதலான தானியங்கள் நன்கு விளையும். அள்ளி வழங்கிய தான பலன் கிடைக்கும்; மாசி மாதத்தில் வரும் 2 சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான். கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்.
பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால், சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும். அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன என்கிறனர் ஆன்மீக பெரியவர்கள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நெருக்கடி நிலை மாறும் நாள். நிதியுதவி கிடைக்கும். நேசித்தவர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
ரிஷபம்
உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். சொல்லை செயலாக்கி காட்ட இயலாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செய்வது நல்லது.
கடகம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டு. இல்லத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக வருமானம் வந்து சேரும்.
கன்னி
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். முன்னேற்றம் கிடைக்க நண்பர்கள் வழிகாட்டுவர். திருமண முயற்சி வெற்றி தரும்.
துலாம்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பால் நன்மை உண்டு. வரன்கள் வாயில்தேடி வரும்.
விருச்சிகம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் சீராக நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
தனுசு
வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடும் நாள். வில்லங்கங்கள் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள்.
மகரம்
நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். எந்த ஒரு செயலையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.
கும்பம்
ஆரோக்கியத் தொல்லை அகலும் நாள். தொலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும்.
மீனம்
பிரச்சனைகள் அகலும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களை வியக்க வைக்கும்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-5 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை இரவு 6.30 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 10.17 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம் திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நட்பு
மிதுனம்-புகழ்
கடகம்-சுகம்
சிம்மம்-பயணம்
கன்னி-அமைதி
துலாம்- சாதனை
விருச்சிகம்-லாபம்
தனுசு- ஆர்வம்
மகரம்-உயர்வு
கும்பம்-முயற்சி
மீனம்-மேன்மை
- குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள்.
- தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு.
அமாவாசை அன்று கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள், தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என தனி பட்டியலே உண்டு. இதில் அமாவாசை விரத சமையலிலும் சரி, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் போது வேதியருக்கு கொடுக்கும் பொருட்களிலும் சரி வாழைக்காய் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். வாழையடி வாழையாக நமது குலம் வளர வேண்டும் என்பதற்காக வாழைக்காய் பயன்படுத்தப்படுவதாக சிலர் சொல்வார்கள். அதே போல் அமாவாசை நாளில் பாகற்காய், பிரண்டை, பலாக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு புராணத்தில் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை வசிஷ்ட முனிவர், விஸ்வாமித்திரரை சந்தித்து, தனது வீட்டிற்கு உணவு அருந்த வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். வசிஷ்டர், விஸ்வாமித்ரர் இருவருமே பயங்கர கோபக்கார முனிவர்கள். வசிஷ்டரின் இந்த அழைப்பை ஏற்ற விஸ்வாமித்ரர், தனக்கு 1008 காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்க வேண்டும் என கூறினார்.
இதை கேட்ட வசிஷ்டர் திகைத்து போனார். "1008 காய்கறிகளா? அத்தனை வகை காய்கறிகளை எப்படி தேடி பிடிப்பது? எப்படி சமைப்பது?" என குழப்பமடைகிறார். ஆனால் அருகில் இருந்த வசிஷ்டரின் மனைவியும், தீவிர பதி விரதையுமான அருந்ததி, விஸ்வா மித்ரரின் வார்த்தைகளை ஏற்று, நீங்கள் கூறிய படி 1008 காய்கறிகளை சமைத்து பரிமாறுகிறேன் சுவாமி என பணிவுடன் பதிலளித்தாள்.
சிரார்த்தம் கொடுக்கும் நாளும் வந்தது. ரிஷிகளில் பிரம்மரிஷி பட்டம் வாங்கிய விஸ்வாமித்ரரும் உணவு சாப்பிட வந்தார். வாழை இலை போட்டு உணவுகளை பரிமாற துவங்கினாள் அருந்ததி. முதலில் எட்டு வாழைக்காய்களை வைத்தாள்.
பிறகு பாகற்காய், பிரண்டை, பலாக்காய் என பரிமாறி முடித்து விட்டு, 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது. உணவு அருந்துங்கள் சுவாமி என பணிவுடன் விஸ்வாமித்ரரிடம் வேண்டினாள். ஆனால் ஆத்திரமடைந்த விஸ்வாமித்ரர், என்ன இது? நான் 1008 காய்கறிகள் சமைத்து பரிமாறச் சொல்லி கேட்டால், நீ நான்கு காய்களை மட்டும் பரிமாறி விட்டு 1008 காய்கறிகள் பரிமாறியாகி விட்டது என சொல்லி என்னை அவமானப் படுத்துகிறாய் என கோபமடைந்தார்.
அதற்கு அமைதியாக பதிலளித்த அருந்ததி, "சுவாமி, தாங்கள் அறியாதது இல்லை. அனைத்தும் அறிந்த நீங்களே இப்படி கோபப்படலாமா? அதாவது பாகற்காய் 100 காய்களுக்கும், பிரண்டை 300 காய்களுக்கும், பலாக்காய் 600 காய்கறிக்கும் சமம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இவை ஆயிரம் காய்கறிகள் ஆகி விட்டது. இதோ எட்டு வாழைக்காய்களை வைத்துள்ளேன். மொத்தம் 1008 காய்கறிகள் ஆகி விட்டது" என கூறினாள்.
இதைக் கேட்டு சாந்தமடைந்த விஸ்வாமித்ரர், அருந்ததியின் புத்திகூர்மையையும், சாஸ்திர முறைப்படி நடக்கும் குணத்தையும் கண்டு வியந்து, அருந்ததியையும், வசிஷ்டரையும் ஆசிர்வதித்து சென்றார். சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டுள்ளதன் காரணமாகவே உயர்வான இந்த 4 காய்கறிகள் மட்டும் அமாவாசை சமையலில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
- மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது.
- இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
மாசி மாதம் மகத்துவமான மாதம். மாசி மாதத்தில் கலைகளையும் கல்வியையும் கற்றறியலாம். உபநயனம் முதலான விசேஷங்கள் செய்யலாம். தீர்த்த நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்றெல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள்.
மாசி மாத அமாவாசையை பால்குண அமாவாசை என்றும், பால்குண மாதத்தின் நிறைவு நாள் என்றும் சொல்லுவது உண்டு. மாசி அமாவாசைக்கு முன்பாக சிவன் மற்றும் அன்னை பார்வதியை போற்றும் மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்து, சிவனின் அருளை பெற்ற கையோடு அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றால் பித்ருதோஷங்களில் இருந்து விடுபட முடியும்.
இந்த மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது. இந்த நாளில் பசுவிற்கு தீவனம் கொடுப்பது நல்லது. அமாவாசை நாட்கள் கிரக பிரவேசம், மொட்டை அடிப்பது, திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் உட்பட எந்த மங்களகரமான சடங்குகளையும் யாரும் செய்வதில்லை.
ஆனால் அமாவாசை நாட்களில் புனித கங்கையில் நீராடுதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்து முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளை மேற்கொள்வதோடு, சனியுடன் தொடர்புடைய பரிகாரங்களையும் செய்யலாம்.
அதேபோல் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபடலாம். அன்று புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வேண்டி அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்கி ஆசிபெற்றால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
- நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார்.
- நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும்.
சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்கங்களுக்கு விளக்கமளிப்ப வரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது… மெத்தப் படித்திருந்தாலும், நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது.
அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானின் தொல்லைகள் தீரும். நந்தி குருவடிவானவர். சிவபெருமான் நந்திக்கு உபதேசம் செய்தார். நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே இந்த உலகத்தில் முக்தி அடைய விரும்பும் ஆன்மாக்கள் நந்தியை வழிபட வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.
பிரதோஷ நேரத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பரிசி நெய் விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும். சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்குப் பசும்பால் வாங்கித் தந்து வழிபடுவது சிறப்பு. நந்திக்குப் பஞ்சாமிருதம் செய்யப் பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நம் வறுமை நீங்கி செல்வ வளம் சேரும். நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும். இளநீர் சமர்பித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நல்லெண்ணையில் விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கி சுகமான வாழ்வு கிடைக்கும். ஆலயங்களுக்கு நல்லெண்ணை தானமாகக் கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை அடையலாம். குறைந்தபட்சம் சில வில்வ இலைகளையாவது நந்திக்கு சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால் போதும். நந்தி உங்களின் வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேற அருள்புரிவார்.
நந்தி தேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபா ராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-4 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.26 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : திருவோணம் இரவு 9.41 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம், வழிபாடு
திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். போதாயன அமாவாசை, ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயா சனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-ஈகை
கடகம்-நலம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-உயர்வு
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-தாமதம்
தனுசு- ஆதாயம்
மகரம்-வரவு
கும்பம்-மேன்மை
மீனம்-முயற்சி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோகமான நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழிலில் புதிய முதலீடு செய்வது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
ரிஷபம்
தன வரவு திருப்தி தரும் நாள். தடைகள் விலகும். தனித்து இயங்க முடிவெடுப்பீர்கள். குடும்ப பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். விரயம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் எதையும் விவாதிக்க வேண்டாம்.
கடகம்
குடும்பச் சுமை கூடும் நாள். பிள்ளைகளின் படிப்பிற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.
சிம்மம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபார போட்டிகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
கன்னி
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
துலாம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
விருச்சிகம்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவாகும். உத்தியோக முயற்சி கைகூடும்.
தனுசு
வருமானம் திருப்தி தரும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். ஓரிரு நாட்களாக தாமதித்த பணிகள் இன்று நடைபெறும். ஆன்மிகப் பயணம் உண்டு.
மகரம்
வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். வருமானம் வந்தாலும் விரயங்கள் மேலாங்கும். தொழில் சீராக நடைபெறும். வி.ஐ.பி.க்கள் சந்திப்பு கிட்டும்.
கும்பம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வீண் விரயம் உண்டு. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
மீனம்
உதாசீனப்படுத்தியவர்கள் ஓடிவந்து இணையும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பற்றாக்குறை அகலும். பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து வந்து சேரும்.
- நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
- சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.
ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.
அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.
அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.
அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.
- மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர்.
- அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருநாவாய் நவ முகுந்தன் கோவில். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இத்தலத்தில் திருமாலை நினைத்து 9 யோகிகள் தவம் செய்துள்ளனர். இதனால் இத்தலம் 'நவ யோகித்தலம்" என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி 'நாவாய் தலம்' என்றாகி, தற்போது 'திருநாவாய்' எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் காடு வழியாக ஒன்பது முனிவர்கள் பயணித்தனர். செல்லும் வழியில் ஒரு இடம் பிடித்துப்போக, அந்த இடத்தில் விஷ்ணுவை வேண்டி தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில், ஒருவர் பின் ஒருவராக எட்டு முனிவர்கள் முக்தியடைந்தனர். இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தம் அடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு, அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். அம்முனிவர், "இறைவா, என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்கள் உருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன. அவர்களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது" என்றார். இறைவன் அவருடைய கவலையைப் போக்க, எட்டு முனிவர்களையும் காட்டியருளினார். அந்த முனிவர்கள், "இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்றுவிட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருக்கிறோம்" என்றனர். அதைக்கேட்ட முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமல் இருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.
இறைவன் "முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்கு தெரியாமலே போய்விடும். பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்" என்றார். பின்பு, இறைவன் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே இங்கு கோவில் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது.
மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து இங்குள்ள பெருமாளை பூஜித்து வந்தனர். ஒரு சமயம் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் கிடைக்காமல் போனது. கஜேந்திரன், இதை பெருமாளிடம் கூறி வருந்தியது. உடனே பெருமாள் லட்சுமியை தேவியை அழைத்து, "இனிமேல் பூப்பறிக்க வேண்டாம், கஜேந்திரனுக்காக விட்டுக்கொடு" என்றார். லட்சுமியும் ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன், தினமும் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை அர்ச்சித்து வந்தது. பூஜையின் போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடன் ஏக சிம்மாசனத்தில் அமரச்செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் பெருமாள், 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார். மிகப்பழமையான இக்கோவிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் உள்ளன. கோவில் சுற்றுப்பகுதியில் கணபதி, திருமகள், ஐயப்பன் ஆகியோர் சன்னிதிகளும் காணப்படுகின்றன.
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவுகடந்த புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் அருள்பாலிப்பதால், இங்கே நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
அமைவிடம்
கேரளாவின் திரூர் நகரில் இருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. திரூரில் இருந்து கோவிலுக்கு பேருந்தில் செல்லலாம்.
- மேஷம் சேமிப்புகள் அதிகமாகும் வாரம்.
- கடகம் விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம்.
மேஷம்
சேமிப்புகள் அதிகமாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் சார்ந்த எண்ணங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வருமானம் உபரியாகும். வராக்கடன்கள் வசூலாகும். சேமிப்புகளை அதிகரிக்கும் எண்ணங்கள் உருவாகும். வீடு, வாகன யோகம் சித்திக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் கவுரவம் நிலைத்திருக்கும். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதால் இன்னல்கள் விலகும்.
திருமண முயற்சிகள் பலிதமாகும். பெண்களுக்கு தாய் வீட்டுச் சீதனம், பாகப் பிரிவினை பணம், சொத்து கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பேச்சு வார்த்தையில் பாகப்பிரிவினை சுமூகமாகும். வெளியூர் பயணங்கள் ஆதாயத்தில் முடியும். அமாவாசை அன்று சிவப்பு துவரை ஒரு கிலோ தானம் வழங்கவும்.
ரிஷபம்
புதிய தொழில் சிந்தனைகள் உருவாக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதன் ராகுவுடன் இணைகிறார். செல்வாக்கு புகழ் அந்தஸ்து பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கவுரவ பதவிகள் கிடைக்கும். மனக் குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும். தவறான விலை நிர்ணயம் உண்டாகலாம் என்பதால் சொத்து வாங்குதல் விற்றல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
புதிய தொழில் அபிவிருத்தி சிந்தனைகள் அதிகரிக்கும். அரசின் டெண்டர் காண்ட்ராக்ட் குத்தகைதாரர்களுக்கு உபரி வருமானம் இரட்டிப்பாகும். புதிதாக சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் புத்திர பிராப்த்தம் போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடவும்.
மிதுனம்
நல்ல சிந்தனைகள் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து உள்ளார். முயற்சிகளில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். சமூகப் பணிகளில் ஆர்வம் கூடும். பெருந்தன்மையாக செயலபட்டு செல்வாக்கை அதிகரிப்பீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் போட்டிகளை தவிர்க்கவும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். 17.2.2026 அன்று காலை 9.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்கள் தவிர்க்கவும். பெரிய பண பரிவர்த்தனைகளை ஒத்தி வைப்பது நல்லது. ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்பட வேண்டும். அமாவாசை அன்று பச்சை பயிறுதானம் வழங்கவும்.
கடகம்
விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் ராகுவுடன் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை ஏற்படுகிறது. குடும்பத்தில் நிலவிய மறைமுகப் பிரச்சினைகள் மறைந்து மகிழ்ச்சியும் சுபிட்சமும் கூடும். மனதில் புதுவிதமான நம்பிக்கை அதிகரிக்கும். தனித் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட பணம் பொருள் வரவுகள் உண்டாகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கிரகண தோஷ பாதிப்பு இருப்பதால் திருமணம் முயற்சிகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைப்பது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல தெளிவு உண்டாகும். 17.2.2026 அன்று காலை 9.06 மணி முதல் 19.2.2026 பகல் 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்பாடுகளில் ஒரு விதமான மந்தத்தன்மை இருக்கும். பிறரிடம் எதிர்பார்த்த சில ஆதாயங்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடவும்.
சிம்மம்
விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து கிரகணம் அடைகிறார். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் காலதாமதம் ஏற்படுவதால் தன் கையே தனக்கு உதவி என்று உணர்வீர்கள். உண்ண உறங்க நேரமின்றி உழைப்பீர்கள். சிலர் உத்தியோக நிமித்தமாக குடும்பத்தை விட்டு விலகி வேறு இடத்தில் வாழும் சூழ்நிலை உண்டாகும். வழக்குகளை வாபஸ் பெறுவீர்கள். மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி தீர்க்கப்படும்.
கொடுத்த பணம் வசூலாகும். சிலருக்கு திடீர் பண வரவு அல்லது கடன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். 19.2.2026 பகல் 3 மணி முதல் 21.2.2026 அன்று இரவு 7.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கோட்ச்சார கிரகங்கள் சுமாராக இருப்பதால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். அமாவாசை அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.
கன்னி
திட்டமிட்டு செயல்படும் செயல்கள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகு மற்றும் சூரியன் சுக்கிரனுடன் சஞ்சரிக்கிறார். கடன் நோய் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு திட்டமிடுதல் அவசியம். எனினும் ஆறாம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும். பிரிந்த தம்பதிகள் வேற்றுமை மறந்து மீண்டும் சேருவார்கள். குடும்ப உறவுகளுடன் இருந்த மனக்கசப்பு மறைந்து ஒற்றுமையும் அமைதியும் நிலவும்.
உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். ஆடம்பர விருந்து உபசாரங்களில் கலந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 21.2.2026 அன்று இரவு 7.07 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. அமாவாசை அன்று விரதம் இருந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு தானம் வழங்கவும்.
துலாம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாரம். ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம் பாக்கியஸ்தானத்திற்கு குரு பார்வை உள்ளது. ஐந்தாம் இடத்தில் உள்ள கிரகச் சேர்க்கை சில நன்மைகளையும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தையும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பால் மனக் கவலைகள் அகலும். கடன் சுமை குறையத் துவங்கும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். கோட்சார கிரகங்கள் சாதகமாக உள்ளதால் கெடுதல்கள் விலகும்.
திருமணத் தடை அகலும். ஓய்வு நேரம் குறையும். தேவையற்ற அலைச்சல் டென்சன், உடல் சோர்வு ஏற்படும். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். கணவன் மனைவிக்குள் நிலவிய வாக்குவாதம் விலகும். தேக நலனில் நிலவிய குறைபாடுகள் அகலும். அமாவாசை அன்று பசுவிற்கு அகத்திக்கீரை தானம் வழங்க நன்மைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறும் வாரம். ராசிக்கு நான்கில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. மனதில் நல்ல விதமான புதிய சிந்தனைகள் உருவாகும். அன்றாட செயல்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எதிர்பார்த்த வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். தொழிலில் வெற்றி நடைபோடுவீர்கள். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும்.
அடமானத்தில் இருந்த வீட்டை மீட்க மகள், மகனின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புரிந்து படிப்பார்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் செய்ய நேரும். சிலரின் நான்கு சக்கர வாகனம் வாங்கும் முயற்சி பலிதமாகும். பூமி, மனை, வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப செலவு செய்து மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசை அன்று விரதம் இருந்து வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.
தனுசு
ஆரவாரமான வாரம். ராசி அதிபதி குரு தன் வீட்டை தானே பார்க்கிறார். பொருளாதார நெருக்கடிகள் விலகி அனைத்து தேவைகளும் நிறைவேறும். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் பூர்த்தியாகும். கடினமான பணிகளைக் கூட சுலபமாகச் செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல சிறப்பாக இருக்கும். புதிய கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வேலை பார்க்குமிடத்தில் எதிர் பாலினத்தவரை அனுசரித்து செல்லவும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ராசிக்கு மூன்றில் கிரகண கிரகச் சேர்க்கை இருப்பதால் பாகப்பிரிவினை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகள் மற்றும் வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். அமாவாசை அன்று விரதம் இருந்து அந்தணர்களுக்கு தானம் தர்மம் வழங்கவும்.
மகரம்
வாழ்வில் வசந்தம் உலா வரும் வாரம். ராசியில் உள்ள உச்ச செவ்வாய் இந்த வாரத்தில் மட்டுமே சஞ்சரிப்பார். செவ்வாயின் இந்த சஞ்சாரம் மிகச் சாதகமான திருப்புமுனையான நல்ல பலன்களை வழங்கும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வுகள் கூடிவரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மன நிறைவுடன் இருப்பீர்கள்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். தாய், தந்தையின் மூலம் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வெளி நாட்டு பயணம் சாதகமாகும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும். அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். எட்டாமிட கேதுவால் வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அமாவாசை அன்று விரதம் இருந்து உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவி செய்யவும்.
கும்பம்
அமைதி காக்க வேண்டிய காலம். ராசியில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. ராகுவுடன் முக்கிய கிரகங்கள் கிரகணம் அடைவதால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். சில எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையலாம். அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படலாம்.
சேமிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதை வாட்டும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு தோன்றும். தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். அமாவாசை அன்று விரதம் இருந்து தான தர்மம் வழங்கவும்.
மீனம்
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும். வீடு, வாகனம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்காக சில விரயங்களை சந்திக்க நேரும். சிலருக்கு அறுவை சிகிச்சையில் ஆரோக்கியம் சீராகும். தூக்கம் குறையும். பயணங்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டு பயணம் செய்ய நேரும்.
ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டும். கண், கை, கால் மூட்டு வலி போன்றவற்றிற்கு சிகிச்சை செய்ய வேண்டிய நேரம் உள்ளது. வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவு செய்ய அதிக சிரமத்தை சந்திப்பார்கள். அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுவீர்கள். முறையான திட்டமிடுதல் இருக்காது. தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டு பயணம் செய்ய நேரும். அமாவாசை அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






