என் மலர்
ஆன்மிகம்
- மன்னன், நாரதர் மூலமாக “சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்” என்பதை அறிந்தான்.
- சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி.
மாசி மாதம் முடியும் நேரமும், பங்குனி மாதம் மாதம் பிறக்கும் தருணமும் கூடும் நேரத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம், 'காரடையான் நோன்பு' ஆகும். இந்த விரதத்தை 'சாவித்திரி விரதம்' என்றும், காமாட்சி விரதம்' என்றும் அழைக்கிறார்கள். திருமணமான பெண்கள், தங்கள் மாங்கல்ய பலத்தை பெருக்குவதற்காக இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
சாளுவ தேசத்தை ஆட்சி செய்த துயமத்சேனன் என்ற மன்னனுக்கு சத்தியவான் என்ற மகன் இருந்தான். சிறப்பாக ஆட்சி செய்த மன்னன், வயது முதிர்வு காரணமாக கண் பார்வையை இழந்தான். இதைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள், மன்னனிடம் இருந்து நாட்டை கைப்பற்றினர். இதையடுத்து, சத்தியவானுக்கு தன் பெற்றோருடன் காட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒரு முறை அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி, காட்டிற்கு சென்றபோது, சத்தியவான் தன் பெற்றோருக்கு பணிவிடை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சத்தியவானை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதுப்பற்றி தன் தந்தையிடம் சாவித்திரி கூறினாள். மன்னன், நாரதர் மூலமாக "சத்தியவான் ஒரு இளவரசன். ஆனால், குறைந்த ஆயுள் கொண்டவன்" என்பதை அறிந்தான்.
இதனால் வருத்தம் அடைந்த மன்னன், சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்துகொடுக்க தயங்கினான். ஆனால் சாவித்திரி, சத்தியவானை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தாள். மன்னன் வேறு வழியில்லாமல், சத்தியவானுக்கே சாவித்திரியை திருமணம் செய்து கொடுத்தான். இதையடுத்து, சத்தியவானும், சாவித்திரியும் காட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.
சத்தியவானுக்கு குறைந்த ஆயுள் என்பதை அறிந்த சாவித்திரி, நாரதரின் அறிவுரைபடி சில விரதங்களை மேற்கொண்டு வந்தாள். ஒரு வருடம் முடிந்த நிலையில், ஒரு நாள் சாவித்திரியின் மடியில் படுத்திருந்த நிலையிலேயே சத்தியவானின் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவான் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதர்மர், கற்புக்கரசியான சாவித்திரியின் கண்ணுக்கு தென்பட்டார்.
சத்தியவானின் உயிரை கவர்ந்துச் சென்ற எமதர்மரை பின் தொடர்ந்தாள், சாவித்திரி. இதைப் பார்த்த எமதர்மர், "எதற்காக என்னை பின்தொடர்கிறாய்" என்று கேட்டார். ஆனால் சாவித்திரி எந்த பதிலும் சொல்லாமல் எமதர்மரை பின்தொடர்ந்தார். உடனே எமதர்மர், "உன் கணவன் உயிரை திருப்பி கொடுக்கவே, பின்தொடர்கிறாய் என்பதை அறிவேன். ஆனால், பிரிந்த உயிர் திரும்புவது என்பது முடியாத காரியம். எனவே வேறு ஏதாவது வரம் கேள்" என்றார்.
எமதர்மர் கேட்டதும் சாதுர்யமாக, "எனக்கு பிறக்கும் நூறு குழந்தைகளை, நான் மடியில் வைத்து கொஞ்சுவதை, என் மாமனார் கண்குளிர காண வேண்டும்" என்று கேட்டாள். உடனே சற்றும் யோசிக்காமல் "அப்படியே ஆகட்டும்" என்று வரம் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். எமதர்மரை தடுத்த சாவித்திரி, "தாங்கள் கொடுத்த வரத்தின்படி, என்னுடைய கணவன் உயிரை திருப்பி தாருங்கள்" என்று கேட்டார். அதன்பின்பு தான், எப்பேர்பட்ட வரத்தை அளித்தேன் என்பதை எமதர்மர் உணர்ந்தார். கொடுத்த வரத்தை மீற முடியாது என்பதால் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார், எமதர்மர்.
சாவித்திரியின் வரத்தின்படி, சத்தியவான் உயிர் பெற்றதோடு, சாவித்திரியின் மாமனாருக்கும் கண் பார்வை கிடைத்தது. இதையடுத்து இழந்த ராஜ்ஜியத்தை மீட்டனர். சத்தியவானும், சாவித்திரியும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். சத்தியவானின் உயிரை மீட்பதற்கு உதவியாக இருந்தது, அவள் கடைப்பிடித்து வந்த 'காரடையான் நோன்பு'. இதனால் தான் இது 'சாவித்திரி நோன்பு' என்றும் அழைக்கப்படுகிறது. காமாட்சி அம்மனும் இந்த விரதத்தை கடைப்பிடித்த காரணத்தால் 'காமாட்சி விரதம்' என்றும் பெயர் பெற்றது.
காரடையான் நோன்பு இருக்கும் பெண்கள், அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு, பூஜை அறையில் கோலம் இட்டு, அம்மன் படம் வைத்து விளக்கேற்ற வேண்டும். கோலத்தின் மீது கும்பம் ஒன்றை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூ சூட வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதை கும்பத்தின் மீது கட்ட வேண்டும்.
அரிசி மாவு, காராமணி சேர்த்து காரடை செய்து, நைவேத்தியமாக படைக்கலாம். அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும். பின்பு, கணவன் கையால் நோன்பு கயிற்றை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம். இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும், திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார், குடும்பம் மகிழ்ச்சியோடு நடைபெறும் என்பது நம்பிக்கை.
- திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர்.
- திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒருவாரமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் கிருஷ்ணதேஜா மாளிகை வரை 3 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மோர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,754 பேர் தரிசனம் செய்தனர். 25,569 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் இதமான காற்று வீசுகிறது.
இதனால் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
கியாஸ், சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை பக்தர்களுக்கு வழக்கம்போல அன்னதானம், லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-29 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி முழுவதும்
நட்சத்திரம் : பூராடம் பின்னிரவு 2.19 வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. காரியநாயனார் குரு பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பருக்கும் ஸ்ரீ காந்திமதியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்றில் ஜலத்தில் அலங்கார திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-கனிவு
கடகம்-போட்டி
சிம்மம்-பொறுப்பு
கன்னி-கடமை
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-நலம்
தனுசு- லாபம்
மகரம்-வரவு
கும்பம்-சிறப்பு
மீனம்-உவகை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
குழப்பங்கள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு.
ரிஷபம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் பணம் எண்ணும் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
மிதுனம்
வரவும் செலவும் சமமாகும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு.
கடகம்
தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலை நேரம் திட்டமிட்ட செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். கடிதம் கனிந்த தகவலை கொண்டுவந்து சேர்க்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
கன்னி
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
துலாம்
யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.
விருச்சிகம்
வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கலபமாக இருப்பவர்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும். அந்தஸ்து உயரும்.
மகரம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
பொறுமையுடன் செயல்பட்டு பெருமை குவிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். மங்கல செய்தி ஒன்று நண்பர்கள் மூலம் கேட்பீர்கள்.
மீனம்
வசதி வாய்ப்புகள் பெருகும் நாள். வருமான பற்றாக்குறை அகலும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை கைகூடும்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-28 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : மூலம் நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, முருகப்பெருமானுக்கு வைரவேல் தரிசனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை.
குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை, பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-வரவு
மிதுனம்-நிறைவு
கடகம்-பாராட்டு
சிம்மம்-நலம்
கன்னி-இன்பம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-லாபம்
தனுசு- ஆக்கம்
மகரம்-தனம்
கும்பம்-களிப்பு
மீனம்-ஆதரவு
- மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.
- ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
வேலூர் மாவட்டம் திருவிரிஞ்சிபுரத்தில் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'கடை ஞாயிறு' திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திறக்கப்படும் சிம்ம குளத்தில் நீராடி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர்' என்ற போட்டி ஏற்பட்டபோது, சிவனின் அடியையோ, முடியையோ காண்பவர்களே பெரியவர் என்று சொல்லப்பட்டது. அப்போது பிரம்ம தேவர் சிவனின் முடியை கண்டதாக பொய் கூறினார். இதனால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற பிரம்ம தேவர், இத்தலத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. இந்த குளம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படுகிறது. அதாவது,
கார்த்திகை மாதம் நடைபெறும் கடை ஞாயிறு விழாவின் முந்தைய நாளான சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இக்குளம் திறக்கப்படும்.
முதலில், ஹீரா நதி எனும் பாலாற்றில் நீராடிவிட்டு, பின்பு இக்கோவில் அருகில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதைத் தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நீராடி, ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி, பழம், பூ, பாலாடை கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.
வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
- புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-27 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி நாளை காலை 4.05 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : கேட்டை இரவு 9.49 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல் கண்ணன் அலங்காரம். வேலூர் கோட்டை ஸ்ரீ துர்க்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கை கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-தனம்
மிதுனம்-பரிசு
கடகம்-வரவு
சிம்மம்-தெளிவு
கன்னி-கடமை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- உயர்வு
மகரம்-பணிவு
கும்பம்-மேன்மை
மீனம்-ஆதரவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தித்தவர்களிடம் சிந்தித்துப் பேசவேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக பிரச்சனை நீடிக்கும்.
ரிஷபம்
நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் நாள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.
மிதுனம்
உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.
கடகம்
எதிலும் முன்னிலை வகிக்கும் நாள். சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைப்பீர்கள். உறவினர்களின் சந்திப்பு கிட்டும். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
கன்னி
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
மகிழ்ச்சி கூடும் நாள். நினைத்தது நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரவு திருப்தி தரும். உத்தியோக உயர்வு உண்டு.
விருச்சிகம்
நல்ல காரியம் நடைபெறும் நாள். பிரியமான சிலரைச் சந்திக்க நேரிடும். நாவன்மையால் நல்ல பெயர் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனுசு
போட்டிகளைச் சமாளித்து புகழ் காணும் நாள். திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடுசெய்ய வரவு வந்துசேரும். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
மகரம்
யோகமான நாள். பொருளாதார நிலை உயரும். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
கும்பம்
அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும் நாள். வீட்டு பராமரிப்பில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும்.
மீனம்
இடமாற்றம் பற்றிய செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். வரவைவிட செலவு கூடும்.
- பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறுகிறது.
- 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் ஒன்றாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து முருகபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதுதான்.
இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 26-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, வெள்ளியானை, தங்க குதிரை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 31-ந்தேதி நடைபெறும். அன்றைய தினம் இரவு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணி அளவில் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 1-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 4.20 மணி அளவில் தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 4-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம், நாதஸ்வர கச்சேரி, வீணை இன்னிசை, பொம்மலாட்டம், தேவராட்டம், சாக்ஷபோன் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவிழா நடைபெறும் மார்ச் 30-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-ந்தேதி மட்டும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
10-ந் தேதி (செவ்வாய்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி ராஜ அலங்காரம், அம்ச வாகனத்தில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (புதன்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல்.
* திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வியாழன்)
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (சனி)
* காரடையான் நோன்பு.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி காலை பல்லக்கில் பவனி, இரவு ராஜாங்க அலங்காரம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள், திருப்பதி ஏழுமலையான் தலங்களில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மனுக்கு புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-26 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி பின்னிரவு 2.02 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : அனுஷம் இரவு 7.16 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
வடபழனி, திருத்தணி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவாதவூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நற்செயல்
கடகம்-தாமதம்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சாந்தம்
துலாம்- வரவு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- வெற்றி
மகரம்-இன்பம்
கும்பம்-விவேகம்
மீனம்-இரக்கம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அவசர முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் ஓரளவே கிடைக்கும்.
ரிஷபம்
முக்கிய புள்ளிகளை சந்தித்து முன்னேற்றம் காணும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே என்ற கவலை மாறும்.
மிதுனம்
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். ஆரோக்கியப்பாதிப்புகள் அகலும். சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் தீரும். அலுவலகப் பணி துரிதமாக நடைபெறும்.
கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. எதிலும் அவசரப்படாமல் செயல்படுவது நல்லது.
சிம்மம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
கன்னி
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களால் குழப்பங்கள் உருவாகலாம். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.
தனுசு
தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். சொந்தங்களின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கலாம்.
மகரம்
பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிழல்போல தொடர்ந்து வந்த கடன் சுமை குறையும். நண்பர்கள் வழியில் உதவி கிட்டும். தொழில் வெற்றி நடைபோடும்.
கும்பம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள்வீட்டு முன்னேற்றத்திற்கு வழி வகுப்பர். எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும்.
மீனம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. வருமானம் திருப்தி தரும்.






