அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி கோவில்பட்டி தொகுதியை கைப்பற்றும் தி.மு.க.?

கோவில்பட்டி தொகுதியில் திமுகவிற்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.
அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி கோவில்பட்டி தொகுதியை கைப்பற்றும் தி.மு.க.?
Published on

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தற்போது தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை அடுத்து அவரது கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக மாலைமலர் தரப்பில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவில்பட்டி தொகுதியில் எடுக்கப்பட்ட மக்கள் பைட்டில், அங்கு திமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது. தற்போது அதிமுகவைச் சேர்ந்த கடம்பூர் ராஜு அங்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com