மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார். மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
Published on: 

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இளம் ஸ்டிரைக்கர் தீபிகா சிறப்பான ரிவர்ஸ் ஹிட் கோல் அடித்து அசத்தினார்.

முன்னதாக லீக் சுற்றில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த விருதுகளை வென்ற நிலையில், தற்போது இந்தியா மூன்றாவது முறையாக மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

முன்னதாக தென் கொரியா அணியும் மூன்று முறை மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது. தற்போது இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com