நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாகச் செயல்படுவார் என்றும், கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
Published on: 

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு நாள் தொடருக்கு இரண்டு கேப்டன்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாகச் செயல்படுவார் என்றும், கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கு ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயாஷ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா (உடற்தகுதியைப் பொறுத்து), குல்தீப் யாதவ்.

கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணி:

ஸ்ரேயாஷ் ஐயர்(கேப்டன்), இஷான் கிஷன் (துணை கேப்டன்) ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், ஆகிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் - உடற்தகுதியைப் பொறுத்து), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

சுற்றுப்பயணம்

இம்மாத இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 ஒருநாள், 5 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com