

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்த ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாகவும், டி20 தொடருக்கு ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்துள்ளது. மேற்கிந்திய தரப்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிரடியாக சதமடித்து அசத்தினார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து 296 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்க உள்ளது.