

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மற்ற நான்கு போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
என்றாலும், இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற வேண்டுமென்றால் இந்த தொடர் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
ஏன் என்றால் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்ற விமர்சனம் இருந்து வந்தது.
விராட் கோலி முதல் போட்டியில் 51 பந்துகளை சந்தித்து 74 ரன்கள் விளாசினார். இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற விமர்சனம் எழவில்லை. ஆனால், 2-வது போட்டியில் 7 ரன்களும், 4-வது போட்டியில் ரன்ஏதும் எடுக்காமலும், 5-வது போட்டியில் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், 4 போட்டிகளுக்கு மேல் கொண்ட தொடரில் அவருடைய மோசமான சராசரி இதுவாகும். கடந்த 11 வருடத்திற்குப் பிறகு இவ்வாறு மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2014-ல் இங்கிலாந்துக்கு ஏதிராக விராட் கோலியின் சராசரி 18 ஆகும். 2008-ல் இலங்கைக்கு எதிராக 31.8 சராசரி ஆகும். நியூசிலாந்துக்கு எதிராக தற்போது 4 போட்டிகளில் 86 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 21.50 ஆகும்.
ரோகித் சர்மாவின் சராசரி விராட் கோலியை விட மோசம். ரோகித் சர்மாவின் சராசரி 7.5 ஆகும். இதற்கு முன்னதாக 2012-ல் இலங்கைக்கு எதிராக வெறும் 2.5 சராசரி வைத்துள்ளார். 2018-ல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9.8 சராசரி வைத்துள்ளார். தற்போது 7.5 ஆகும்.
இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடவில்லை. ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. என்றாலும் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை. ஷ்ரேயாஸ் அய்யரும் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
நியூசிலாந்தின் சதோஷ்ணநிலை, தென்ஆப்பிரிக்கா சீதோஷ்ண நிலைக்கு இணையானது. இதனால் நியூசிலாந்து தொடர் இந்திய அணிக்கு நல்ல பயிற்சியாக அமையும் எனக் கூறப்பட்டது. தற்போது பேட்ஸ்மேன்கள் சொதப்பலால், உலக கோப்பைக்கான தேர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.