அனைத்து பார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்

இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகினார்.மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
mccullum england coach
Published on

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.

அண்மையில், , இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com