பேட்ட ரஜினி ஸ்டைலில் டோனி.. வைரலாகும் வீடியோ

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் இன்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றனர்.நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் காட்சிகளை மையப்படுத்தி அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது.
பேட்ட ரஜினி ஸ்டைலில் டோனி.. வைரலாகும் வீடியோ
Published on

17-வது ஐ.பி.எல். சீசனில் இன்று லக்னோவில் நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன. இதையொட்டி சென்னை வீரர்கள் லக்னோ சென்றடைந்து அங்கு தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டோனியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் காட்சிகளை மையப்படுத்தி அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை சிஎஸ்கே தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் ஏகனாவுக்கு பேட்ட பராக் என பதிவிட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com