எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டுகள் மொத்தம் 4293 பதிவாயின. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்.
Published on

எடப்பாடி:

தமிழக நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான எடப்பாடி சட்டமன்ற தொகுதி தமிழகம் முழுவதும் வாக்குகள் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவன மையத்தில் வைத்து எண்ணப்பட்டன.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. சார்பில் சம்பத்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், அ.ம.மு.க. சார்பில் பூக்கடை சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா மற்றும் சுயேச்சைகள் உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதலில் தபால் ஓட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தபால் ஓட்டுகள் மொத்தம் 4293 பதிவாயின. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது முதல்-அமைச்சர் எடப்பாடிபழனிசாமி 5484 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஓட்டு விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.)- 5484

சம்பத்குமார் (தி.மு.க.)- 2159

X

Maalai Malar
www.maalaimalar.com