அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக மாறும் ஜடேஜா!

சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா, சாம் கர்ரனை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக மாறும் ஜடேஜா!
Published on

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.

அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கேப்டன் பதவியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை ஜடேஜா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com