அதிவேகமாக 7 ஆயிரம் ரன்: விராட் கோலி சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் விளாசினார்.1 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்ததுடன், 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.
அதிவேகமாக 7 ஆயிரம் ரன்: விராட் கோலி சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்
Published on

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 304 ரன்கள் குவித்தது. பின்னர் 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சன் (133 நாட்அவுட்), கான்வே (97) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து 304 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமநிலை செய்தபோது, கேன் வில்லியம்சன் 6,997 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கேன் வில்லியம்சன் பவுண்டரி விளாசினர். இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, கேன் வில்லியம்சன் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.

167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்போது விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வில்லியம்சன் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

150 இன்னிங்சில் 7 ஆயிரம் ரன்களை கடந்து ஹசிம் அம்லா முதல் இடத்தில் நீடிக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்சில் கடந்து 4-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com