டெஸ்ட் தரவரிசை: பும்ரா மீண்டும் முதலிடம்.. ஜெய்ஸ்வால் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.ரிஷப் பண்ட் 736 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறார்.
டெஸ்ட் தரவரிசை: பும்ரா மீண்டும் முதலிடம்.. ஜெய்ஸ்வால் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
Published on

துபாய்:

ஐசிசி வாரம்தோறும் டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், வீரர்கள், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2-ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் (736 புள்ளி) 6-வது இடத்தில் தொடர்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி 9 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, 883 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அஸ்வின் (807 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா (423 புள்ளி) முதல் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் (290 புள்ளி) 2வது இடத்திலும் தொடர்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com