கேப்டன் மார்க்ரம் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
கேப்டன் மார்க்ரம் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?
Published on

டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

ரோகித் சர்மா மற்றும்  இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.

யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com