வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வன்னிமரம் குத்தும் உற்சவம்

நவராத்திரி தசரா உற்சவத்தை முன்னிட்டு சஷ்டி மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டு இருந்தது.
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வன்னிமரம் குத்தும் உற்சவம்
Published on: 
Summary

உற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நவராத்திரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி வடக்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீதேவி திரிபுரசுந்தரி அம்மனுக்கு நாள்தோறும் காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்து வந்தார்.

நவராத்திரி

நவராத்திரி தசரா உற்சவத்தை முன்னிட்டு சஷ்டி மண்டபத்தில் கொலு அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மூலவர் முருகப்பெருமான் மற்றும் திரிபுர சுந்தரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு அம்மன் சந்நிதியில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.

பூஜைகள்

தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு மகிஷாசு ரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் வன்னிமரம் குத்தும் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. அசுரனை அழிக்கும் கோலத்தில் சூலமேந்தி வடக்கு பிரகாரத்திற்கு உற்சவர் எழுந்தருளினார். அங்கு வன்னிமரத்தினடியில் ஒளிந்து கொண்டிருக்கும் மகிஷனை அழிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. பக்தர்களின் கோரிக்கைப்படி இந்த ஆண்டு முதல் வன்னிமரம் குத்தும் உற்சவத்திற்குத் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்ததை அனைவரும் பாராட்டினர்.

துர்காதேவி

துர்காதேவி அசுரனை அழிக்க எட்டு திக்கும் சூலமெய்திய நிகழ்வை குறிக்கும்வண்ணம் வன்னிமரத்தின் மீது எட்டுமுறை சூலத்தால் குத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை யத்துறை காஞ்சீபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை அறிவுரைப்படி கோவில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com