335 நாட்களுக்கு பிறகு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தெய்வானையுடன் 335 நாட்களுக்கு பிறகு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
335 நாட்களுக்கு பிறகு நாளை நடக்கிறது திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் முருகப்பெருமான் உலா

கடந்த 335 நாட்களுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடக்கிறது.
11 மாதத்திற்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் வலம் வந்த தங்கத் தேர்

திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு தங்கத் தேர் வலம் வந்தது. கோவில் அதிகாரிகள் வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்

பழனி முருகன் கோவிலில், கடந்த 20 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
காளிப்பட்டி கந்தசாமி கோவில்- நாமக்கல்

சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் இருக்கிறது நூற்றாண்டு பழமை கொண்ட காளிப்பட்டி கந்தசாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதணை காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதியில்லை

தைப்பூச திருவிழாவையொட்டி மருதமலை முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை தைப்பூச விழா

வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச விழா நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி 5 சுவாமிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் முறையாக திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நடந்த தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 28-ந் தேதி அதிகாலை 3 முதல் 5.30 மணிக்குள் நடைபெறுகிறது.
சோலைமலை முருகன் கோவிலில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி

சோலைமலை முருகன் கோவிலில் மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து

முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அழகர்கோவில் மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சோலைமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருமுருகநாதர் திருக்கோவில்- திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து: பக்தர்களுக்கும் தடை

கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
1