

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர், காளியம்மன், திருநாவுக்கரசு மடம், ரெட்டைமலையான் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 27-ந்தேதி முதல் காலையாக சால பூஜைகள் தொடங்கின. நேற்று இரண்டு, மூன்றாவது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது .
விழாவில் இன்று காலை நான்காவது கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாபூர்ணா ஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையடுத்து கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.
விழாவில் கோவில் பொறுப்பாளர்கள் ராமலிங்கம், து.செல்வம், அன்பழகன் மற்றும் கிராமவாசிகள், பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.