

இந்தியாவில் பண்டிகை காலத்தை குறிவைத்து விநியோகம் துவங்கப்பட்டுள்ளதோடு, பலருக்கும் இந்த பண்டிகை காலம் ராசியான ஒன்றாக பார்க்கப்படுகிறது. யமஹா FZ25 நேக்டு வெர்ஷன் மாடலைத் தழுவிய ஃபேசர் 250 ஃபுல்லி ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் ஆகும். இதனால் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் FZ25 மாடலை விட 6 கிலோ எடை அதிகமாகியுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை ஃபேசர் 250 மாடல் 2502சிசி ஆயில் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 20.96 PS மற்றும் 20 NM செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள யமஹா ஃபேஸர் 25 லிட்டருக்கு 43 கிலோமீட்டர் செல்லும்.
14 லிட்டர் பெட்ரோல் டேன்க் வழங்கப்பட்டுள்ள ஃபேஸர் 250 ஒருமுறை டேன்க் முழுக்க பெட்ரோல் போட்டு 600 கிலோமீட்டர் செல்ல முடியும் என யமஹா தெரிவித்துள்ளது. புதிய ஃபேசர் 250 மாடலில் ABS வழங்கப்படாதது ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ள போதும் விரைவில் ABS மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.