சிங்கப்பூரில் அமலுக்கு வந்தது புதிய விதிகள்: பேருந்தில் கால் வைத்தால் ரூ.37 ஆயிரம் அபராதம்.!

ஆரோக்கியமான போக்குவரத்து சூழலை இந்த புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கும்.
singapore
Published on

பேருந்தில் கால் வைத்தால் அபராதம்

சிங்கப்பூரில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது இருக்கையின் மீது கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோக்களை ஒலிக்க செய்வது மற்றும் பேருந்தின் உள்ளே உணவு அருந்துவது, குப்பைகளை வீசுவது போன்ற செயல்களுக்கு ஈட்டுபடுவோர் 500 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 37,000 வரை) அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் கூறியிருப்பதாவது

இந்த புதிய அபராத நடவடிக்கை குறித்து, அந்நாட்டு போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதுபடி, மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு பாதுகாப்பான இனிமையான போக்குவரத்து சூழலை உருவாக்குவதை கருத்தில் கொண்டு இந்த நடைமுறையானது அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

சட்டப்பூர்வ குற்றங்களாக மாற்றம்

இதற்கு முன்னர் எம்ஆர்டி ரயில்களில் உணவு உண்பவர்களுக்கு நீண்டகாலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேருந்துகளில் இதுபோன்ற விதிகள் பேருந்தின் உள்கட்டுப்பாடகவே இருந்து வந்துள்ளது.

ஏதேனும் இந்த தேவையற்ற செயல்களில் பயணிகள் ஈடுபடும்போது அவர்களை பேருந்திலிருந்து இறங்குமாறும் மட்டும் கூற முடிந்த நிலை இருந்தது.

இந்த நிலையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுப்படுவோர் மீது நேரடியாக அபராதம் விதிக்ககூடிய சட்டப்பூர்வ குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com