பிரிக்ஸ் உச்சிமாநாடு: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்!

பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார்.
Xi Jinping -Narendra Modi
Published on
Summary

கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.

18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைக் குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் சீன அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.

ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு நிலைக்குழு உறுப்பினரும், கட்சியின் மத்திய குழு அலுவலக இயக்குனருமான காய் கி, சீன வெளியுறவு மந்திரியும், கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான வாங் யி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். ஜி ஜின்பிங் பிரதமர் மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு சந்தித்து பேச உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முறைசாரா உச்சிமாநாட்டிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்

மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர்ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.

இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது, எல்லைக் எல்லை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைப்பது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முக்கியத்துவம்

இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்படப் பல உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதாரச் சவால்கள், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றங்கள், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி சீரமைப்பு போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இரு பெரிய ஆசிய வல்லரசுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com