பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கும் அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் - சீனா வலியுறுத்தல்

பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கும் மதிப்பளித்து அமெரிக்கா எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை உயர் அதிகாரி யாங் ஜீச்சி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கும் அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் - சீனா வலியுறுத்தல்
Published on


பீஜிங்:

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் முக்கியமான பணியை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு கவலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என சீனாவின் உயர்மட்ட வெளியுறவுத்துறை அதிகாரி யாங் ஜீச்சி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனிடம் வலியுறுத்தி உள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அந்த உரையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு இடம் கொடுப்பது குறித்து பேசினார். 

அப்பொழுது, பாகிஸ்தானுக்கு தீவிரவாத அமைப்புகளை எதிர்த்து போராட கோடிக்கணக்கான டாலர்கள் அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது. ஆனால் அந்நாடு தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. பாகிஸ்தானின் தற்போதைய நிலை உடனடியாக மாற வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்கவேண்டி வரும், என கூறியிருந்தார்.

இந்த பிரச்சனையில் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது என சீனா ஏற்கனவே கூறியிருந்தது. 

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறினார். பாகிஸ்தானுக்கு சீனா தன்னுடைய ஆதரவை தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் இறையாண்மைக்கும், பாதுகாப்பு கவலைக்கும் அமெரிக்கா மதிப்பளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் முக்கியமான பணியை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும், பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் சட்டப்பூர்வமான பாதுகாப்பு கவலைக்கு மதிப்பளிக்க வேண்டும் என யாங் ஜீச்சி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com