மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு

மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லாவ் அகர்வால்
லாவ் அகர்வால்
Published on

புதுடெல்லி:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வழிகாட்டு நெறிமுறைகளின்படி வீட்டிலேயே நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

என்னுடைய நண்பர்கள், உடன் பணியாற்றுவோர் என அனைவரும் தங்களை சுய கண்காணிப்பு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியை சுகாதார குழு மேற்கொள்ள உள்ளது. அனைவரையும் விரைவில் நான் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com