திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் - க.அன்பழகன் அறிவிப்பு

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. முரசொலி நிர்வாக இயக்குநராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com