

கும்பகோணத்தில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சட்டசபை கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். கதிராமங்கலம், நெடுவாசல் உள்பட முக்கிய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன்.
போலி மருத்துவர்கள் அரசால் தான் உருவாகுவார்கள். நீட் தேர்வு போன்ற மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வெளிநாடுகளில் உள்ளது போல் இந்தியாவிலும் அதிபர் ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்தில் வெகு விரைவில் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும். ஆர்.கே. நகர் தொகுதியில் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கினார்கள். இருந்த போதிலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
ஆர்.கே.நகர் மக்கள் இன்னும் அதிக சிந்தனையுடன் வாக்களித்து இருந்தால் தி.மு.க.வை போல் அ.தி.மு.க.வுக்கும் டெபாசிட் கிடைத்து இருக்காது.