ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: முன்னிலையில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன்

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் 412 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: முன்னிலையில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன்
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். 

பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க-257, தி.மு.க-92, சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன்-412, பா.ஜ.க-6 நாம் தமிழர்-0 வாக்குகள் பெற்றுள்ளன.

சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் 412 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். மதுசூதனன் 257 வாக்குகளுடனும், மருது கணேஷ் 92 வாக்குகளுடனும் பின் தங்கியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com