ஆர்.கே நகர் முடிவுகள்: முதல் சுற்று வாக்கு நிலவரம் - டி.டி.வி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 5,339 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி தினகரன் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆர்.கே நகர் முடிவுகள்: முதல் சுற்று வாக்கு நிலவரம் - டி.டி.வி தினகரன் முன்னிலை
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். 

பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே:- 

டி.டி.வி தினகரன்-5,339

அ.தி.மு.க-2738

தி.மு.க-1182

நாம் தமிழர்-258

நோட்டா-122

பா.ஜ.க-66

சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com