முதல்வர் பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள்

முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள அவசர கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதால் அவர்கள் அணி மாறக்கூடுமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதல்வர் பழனிசாமியின் ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள்
Published on

சென்னை:

முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர்கள், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் என பலர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.பி.க்களான நவநீத கிருஷ்னன், விஜிலா சத்தியானந்த் மற்றும் கோகுல கிருஷ்னன் ஆகிய மூவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால், அவர்கள் அணி மாறக்கூடுமோ? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு கிடைத்திருந்த நிலையில், தினகரன் ஆதரவாளர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வருவார்கள் என மூத்த தலைவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com