

சென்னை:
எம்.ஜி.ஆர். நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. நிர்வாகி வைத்த பேனர் கிழிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சாலிகிராமத்தில் தினகரன் ஆதரவாளர் காருக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் காரணமாக இருதரப்பினரும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதும் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினர் மீதும் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் விருகம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் தினகரன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி மாணவர் அணி செயலாளர் அம்மன் கோவில் ராஜா, பரணி இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.