நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்- வைரலான செல்வப்பெருந்தகை பதிவு

அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே என பதிவிட்டுள்ளார் செல்வப்பெருந்தகை.
Selvaperunthagai
Published on: 
Summary

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் வர உள்ள சூழலில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் 2:00 மணிக்கு சந்திக்க உள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணித் தலைவர்கள் வர உள்ள சூழலில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியது தவறான முடிவு என்று பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே

செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் "அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகளே!" என்று குறிப்பிட்டுள்ள செல்வப்பெருந்தகை, நாம் விட்டுச் சென்றது வெறும் பாலைவனம் அல்ல, அது ஒரு செழிப்பான சோலைவனம் என்று செல்வப்பெருந்தகை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா கூட்டணித் தலைவர்களின் சென்னை வருகைக்கும் முன்னதாக வெளியாகியுள்ள இந்தப் பதிவு, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X