வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் சேவை வழக்கம்போல் இயங்கும்

பயணிகள் தங்களது பயணங்களை எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail
Published on: 

சென்னையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை எனவும், வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தற்காலிக அனுமதி நீட்டிப்பு

இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதற்காக பெறப்பட்டிருந்த தற்காலிக அனுமதி அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களது பயணங்களை எந்தவித தடையுமின்றி தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இடைப்பட்ட சில பகுதிகளில் நடந்து வரும் மீதமுள்ள கட்டுமானப் பணிகளை விரைவாக முழுமை பெறச் செய்து, உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி மிக விரைவில் நிரந்தர அனுமதியைப் பெறுவதற்கான தீவிர நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மெட்ரோ ரெயில் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

X