

தகவலறிந்து வந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார் காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர், வள்ளியம்மாள் தெருவைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 18.). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர் பாராதவிதமாக திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் காயத்ரி தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பூர் ரெயில்வே போலீசார் காயத்ரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.