பிரதமர் மோடியுடன் அமேசான் CEO சந்திப்பு: இந்தியாவில் 48 பில்லியன் டாலர் முதலீடு

அமேசான் நிறுவன சி.இ.ஓ. உடனான சந்திப்பு பயனுடையதாக இருந்தது என்றார் பிரதமர் மோடி.
pm modi, amazon ceo
Published on: 

அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆண்டி ஜஸ்ஸி இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆண்டி ஜஸ்ஸி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது இந்தியாவில் அமேசான் முதலீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உட்கட்டமைப்புக்காக 21 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையும் அடங்கும்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமேசான் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி உடனான சந்திப்பு பயனுடையதாக இருந்தது. இந்தியாவில் அமேசான் நிறுவனம் சுமார் 48 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இதன்மூலம் இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com