

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போர் உச்சத்தில் இருக்கும் சூழலில் வெடித்துள்ள இந்தச் சதி விவகாரம், சர்வதேச வர்த்தக சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 'மெகாஸ்பீட்' நிறுவனத்தின் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங்குடன் தனக்கு இருந்த தனிப்பட்ட உறவை ஜென்சன் ஹுவாங் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது குடும்பத்தினருக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் அவர் மனப்பூர்வமான மன்னிப்பு கோரியுள்ளார்.
சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனம் மூலம் சுமார் $4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிநவீன ஏஐ சில்லுகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமெரிக்காவின் கடுமையான வர்த்தகத் தடைகளை மீறி அந்தச் சில்லுகள் சீனாவுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆலிஸ் ஹுவாங், சீனாவின் உளவுத்துறைக்காகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உலக தொழில்நுட்ப அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சர்ச்சை பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இது குறித்து முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்குத் தான் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ள ஜென்சன் ஹுவாங், தனது தனிப்பட்ட செயல்களுக்கும் தவறுகளுக்கும் முழுப் பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தேசியப் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ரகசியங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்யப்படவில்லை என்று என்விடியா தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போர் உச்சத்தில் இருக்கும் சூழலில் வெடித்துள்ள இந்தச் சதி விவகாரம், சர்வதேச வர்த்தக சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசின் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் சில்லுகள் ஏற்றுமதி தொடர்பான கொள்கைகளை இந்த விவகாரம் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.